டி-20 பெண்கள் உலக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடந்து வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் உலக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தினை எட்டியுள்ளது.
இறுதிப் போட்டிக்குத் தேர்ச்சியாகும் அணியை முடிவு செய்யக் கூடிய அரை இறுதிப் போட்டிகளின் முதல் ஆட்டம் நேற்று இரவு துபாயில் வைத்து நடந்து முடிந்தது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவிற்கு எதிரான ஆண்கள் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கின் உலகக் கோப்பை போட்டி தொடர்களில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்தது தென்னாப்பிரிக்கா அணி.
அவர்களைப் போலவே 2024 இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள். துபாயில் நேற்று இரவு இந்த இரு அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டி நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் நூற்றி முப்பத்தி நான்கு ரன்களை ஐந்து விக்கெட்டுகளை இழந்து எடுத்திருந்தது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர் காஹ்கா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மூனி நாற்பத்தி நான்கு ரன்களையும், எல்லீஸ் பெர்ரி முப்பத்தி ஓரு ரன்களையும், கேப்டன் மெக்ராத் இருபத்தி ஏழு ரன்களையும் குவித்தனர்.
நூற்றி முப்பத்தி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி அதோடு இறுதிப் போட்டிக்கு தேர்வாகலாம் என்ற முனைப்போடு களத்திற்குள் சேஸிங் செய்ய சென்றது தென்னாப்பிரிக்க அணி. அந்த அணியின் அன்னிகே போஸ்க் ஆட்டத்தை ஒரு அணி சார்பான ஆட்டமாக மாற்றினார் தனது அதிரடி பேட்டிங்கின் மூலம்.
தென்னாப்பிரிக்க அணித் தலைவர் லவ்ரா வால்வார்ட் முப்பத்தி ஏழு பந்துகளில் நாற்பத்தி இரண்டு ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்க அணியின் அபார வெற்றி பெற துணையாக நின்றார்.
பதினேழு புள்ளி இரண்டு ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி நூற்றி முப்பத்தி ஐந்து ரன்களை எடுத்து நடப்பு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தேர்வான முதல் அணி என்ற பெருமையை பெற்றது. கிரிக்கெட் போட்டிகளில் அதீக்கம் செலுத்தி வரும் பலமிக்க ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வென்றதால் தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்கயிருக்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு முப்பது மணிக்கு துபாயில் வைத்து நடைபெற உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…