வழிவிட கோரி ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுனருக்கு ஆட்டோ ஓட்டுநர் அரிவாலை எடுத்துக்காட்டிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொண்டோட்டி பகுதியில், சாலையில் முந்தி செல்வதற்காக பேருந்து ஓட்டுனர் ஹாரன் அடித்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்துக்காட்டி இருக்கின்றனர். கோழிக்கோட்டில் இருந்து மஞ்சேரி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் சென்று கொண்டிருந்தார் .
நீண்ட நேரம் வழிவிடாமல் சென்று கொண்டிருந்ததால் பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். பலமுறை ஹாரன் அடித்தும் அவர் வழிவிடவில்லை. பின்னர் ஆட்டோ ஓட்டுனர் அரிவாளை எடுத்து வெளியே நீட்டினார். ஆட்டோ ஓட்டுனர் அரிவாளை காட்டும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனர் சம்சுதீனை கைது செய்துள்ளனர். கைதான சம்சுதீன் அரிவாளை கூர்படுத்துவதற்காக கொண்டு சென்றுள்ளார் என்றும், அப்போது பேருந்து ஓட்டுனர் பலமுறை ஹாரன் அடித்ததால் கோபமாகி சம்சுதீனை அறிவாலை எடுத்துக்காட்டியதாக காவல்துறையினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…