டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததால் 2 வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது. அடுத்த ஆடிய இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆல் அவுட் ஆனது.
இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான பாபர் அசாம், ஷாஹீன் அஃப்ரிடி, மற்றும் நசீம் ஷா ஆகியோர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது முல்தான் மைதானத்தில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…