டி20 உலகக்கோப்பை குரூப் 8 சுற்றில் விளையாடும் 3 மேட்ச்களில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றும் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை. அதேபோல், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவைப் பொறுத்தவரை அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் வெளியேறவும் வாய்ப்புகள் உண்டு.
சூப்பர் 8 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிக்குப் பின் குரூப் 2-வில் முதலிடத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்கா. அதேநேரம் அவர்களின் நெட் ரன் ரேட்டும் +0.625 ஆக இருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிரான 9 விக்கெட் வெற்றியால் இங்கிலாந்தை முந்தி வெஸ்ட் இண்டீஸ் நெட் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்த இரண்டு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி, ஒரு தோல்வியோடு இருக்கின்றன. அரையிறுதிக்கு அமெரிக்கா தகுதிபெறுவது எதாவது மேஜிக் நடந்தால் மட்டுமே நடக்கும். சூப்பர் 8 சுற்றின் முதல் 2 மேட்ச்களை வெற்றிபெற்றும் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மேட்சில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும்.
அந்தப் போட்டியில் தோற்றால், தங்களது சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றிபெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவைப் பின்னுக்குத் தள்ள வாய்ப்புகள் அதிகம். இதேபோல்தான், 2007-ல் நடந்த முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் 4 போட்டிகளில் வெற்றிபெற்றும் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை தென்னாப்பிரிக்கா இழந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…