வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக பலமிக்க பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருந்தது.
அனுபவம் மிக்க பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே கத்துக்குட்டி அணியான வங்கதேசம் வீழ்த்தியிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை வேதனை அடையச் செய்தது. இந்நிலையில் வெற்றி குதூகலத்துடன் இருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடிய அணியிலிருந்து பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள பதினாறு பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான இந்த அணியில் பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் விளையாடிய சொரிபுல் இஸ்லாம் மட்டும் சேர்க்கப்படவில்லை.
காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் முந்தைய தொடரில் பங்கேற்ற அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள பங்களாதேஷ் அணியின் பதினாறு பேர் கொண்ட வீரர்களின் விவரம் – நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வருகிற பத்தொன்பதாம் தேதி சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…