இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகிய இருவருக்கும் இஷான் கிஷனுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இன்று காலை துலீப் கோப்பை தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் துவங்கின. இந்நிலையில், போட்டி துவங்க சற்று நேரங்களே இருந்த போது, இஷான கிஷன் அணியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புச்சிபாபு தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து அவர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
புச்சி பாபு தொடரில் விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக துலீப் கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகளில் இஷான் கிஷன் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
அதன்பிறகு, துலீப் கோப்பை தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளில் இஷான் கிஷன் விளையாடுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் துலீப் கோப்பை தொடருக்கான எந்த அணியிலும் இடம்பெறவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
மேலும், பலர் இஷான் கிஷன் துலீப் கோப்பை தொடரின் எந்த அணியிலும் இடம்பெறாதது குறித்து எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்தனர். பலர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க எக்ஸ் பதிவுகளில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இன்று காலை பிசிசிஐ வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் துலீப் கோப்பை தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளில் இந்தியா சி அணியின் பிளேயிங் XI-இல் இஷான் கிஷன் பெயர் இடம்பெற்றுள்ளது.
துலீப் கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகள் முடிந்த பிறகு வங்கதேசம் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துலீப் கோப்பை அணிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
அப்போதும் கூட இஷான் கிஷன் துலீப் கோப்பை தொடரின் எந்த அணியிலும் இடம்பெறவில்லை. தற்போது போட்டி துவங்கும் நிலையில், அவரது பெயர் திடீரென இந்தியா சி அணியில் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தாலும், அணியில் திடீர் மாற்றம் செய்ய என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…