இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 840 விக்கெட்களை வீழ்த்தி இருக்கும் ஸ்டூவர்ட் பிராட், கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெள்ளை பந்தில் கிரிக்கெட் விளையாடினார்.
எனினும், தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஸ்டூவர்ட் பிராட் 600-க்கும் அதிக விக்கெட்க்ளை வீழ்த்தி இருக்கிறார். அந்த வகையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் ஸ்டூவர்ட் பிராட் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் ஜேம்ஸ் ஆன்டர்சன் உள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றும் தொடரின் ஒரு போட்டியில் கூட ஸ்டூவர்ட் பிராட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிங்ஸ் XI பஞ்சாப் தற்போது பஞ்சாப் கிங்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் அணியில் விளையாடுவதற்காக ஸ்டூவர்ட் பிராட் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பஞ்சாப் அணி ஸ்டூவர்ட் பிராட்-ஐ நான்கு லட்சம் டாலர்கள் கொடுத்து ஒப்பந்தம் செய்து இருந்தது. எனினும், உலக கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டூவர்ட் பிராட் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி ஸ்டூவர்ட் பிராட்-ஐ தக்கவைத்துக் கொண்டது. எனினும், காயம் காரணமாக மீண்டும் அவர் தொடரில் இருந்து விலகினார். அதன்பிறகு ஸ்டூவர்ட் பிராட் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது நாள் களத்தில் இறங்கிய ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சனுக்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டூவர்ட் பிராட்-க்கு பல்வேறு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…