Categories: indialatest news

காதலியை பிரித்த தோழி… கடுப்பான காதலன் செய்த வெறிச்செயல்.. பெங்களூரில் அதிர்ச்சி…

பெங்களூரில் இளம்பெண் ஒருவர் விடுதி அருகில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பெங்களூரு மாநிலத்தின் கோரமங்களா பகுதி விஆர் லே-அவுட்டில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் கீர்த்தி குமாரி என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் முதல் தங்கி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அவரின் அறைக்கதவை யாரோ திடீரென தட்டி இருக்கின்றனர்.

கீர்த்தி குமாரியும் சென்று கதவை திறந்து பார்க்க அங்கிருந்து இளைஞர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் நிலை தடுமாறிய கீர்த்தி தன்னை காத்துக் கொள்ள போராடினாலும் அவர் விடாமல் அவரை பலமுறை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார். பின்னர் கீர்த்தி குமாரியை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனை தூக்கி செல்ல செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

கீர்த்தி குமாரியை விடுதியில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த இளைஞரிடம் கீர்த்தி குமாரி பலமுறை போராடி உயிர் விட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞரை சமீபத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பித்த அந்த நபரின் பெயர் அபிஷேக் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரை விசாரித்த நிலையில், கீர்த்தி குமாரி இதற்கு முன் தங்கி இருந்த பெண்கள் விடுதியில் அவருடன் இன்னொரு இளம் பெண் தங்கி இருக்கிறார். அவரின் காதலன் தான் அபிஷேக். வேலைக்கு செல்லாமல் காதலியுடன் தொடர்ந்து பிரச்சினை செய்து கொண்டே இருந்திருக்கிறார். இதனால் அவரிடம் இருந்து விலகி இருக்குமாறு கீர்த்தி குமாரி அறிவுரை சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய நன்றியை வேறு ஒரு விடுதியில் சேர்த்து விட்டு தானும் இந்த விடுதிக்கு மார்ச் மாதம் கீர்த்தி மாறி வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தன்னுடைய காதலை கீர்த்தி குலைத்து விட்டதாக நினைத்து அவரை கொலை செய்திருக்கிறார் அபிஷேக். இதுகுறித்த மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

கீர்த்தி கொலை செய்யப்பட்ட சிசிடிவி: https://x.com/shahilon/status/1817101503846601145

AKHILAN

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago