latest news
அரசியலில் இருக்க வேண்டுமா?…அண்ணாமலை ஆதங்கம்!…
கோவை குஜராத் சமஜாத்தில் நடைபெற்ற தன்னாரவலர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கோயம்பத்தூரில் பாஜக தோல்வியடையவில்லை என்றார். கோவை தொகுதியில் வெற்றி தள்ளிப்போய் உள்ளது எனச் சொன்னார். இந்த தொகுதியில் முப்பத்தி மூனு சதவீத வாக்குகளை பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி என்றார்.
இங்குள்ள நூறு பூத்களில் முதல் அல்லது இரண்டாவது இடம் வரை பாஜக வந்துள்ளது, இதே போல தமிழகத்தில் மொத்தமுள்ள அறுபத்தி எட்டாயிரம் பூத்களில் எட்டு ஆயிரம் பூத்களில் பாஜக முதன்மை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார் அண்ணாமலை. கட்சி களப்பணியாளர்களின் செயல்பாடுகள் ஆழமாக வேரூன்ற தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோவை நாடாளுமன்ற தேர்தல் ஒரு ஆன்மீக பயணம், பணம் இல்லாமல் பலவகையான சவால்களை சந்தித்து இந்த நிலையை அடைந்துள்ளோம், இதனால் கோவையில் பாஜக தோற்க வில்லை. அதன் வெற்றி தள்ளிப்போய் உள்ளதாக கூறினார்.
தனது அரசியல் பயணம் குறித்து பேசத்துவங்கிய அண்ணாமலை சில நேரம் கால்களை முன்னால் வைக்க வேண்டும், சில நேரங்களில் கால்களை பின்னால் வைக்க வேண்டும், எப்போது முன்னால் வைக்க வேண்டும், எப்போது பின்னால் வைக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும் என்றார். அரசியலில் எதிர்கட்சியினர் மட்டுமல்ல, சொந்த கட்சியில் இருப்பவர்களும் குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். அதனால் அரசியலில் சகிப்புத்தன்மை, பொறுமை, சமரசம் ஆகிய மூன்றும் மிக முக்கியம் என்றார்.
அரசியலில் இருக்க வேண்டுமா? என்ற எண்ணம் தனக்கு மனதில் தோன்றியது உண்டு. எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். தனித்தன்மை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கட்சியில் இணையாமல் செயல் பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.