latest news
நான் பாட்டின்னா…ஸ்டாலின் யாரு?…சீறிப்பாய்ந்த பாஜக பெண் கவுண்சிலர்…
சென்னை மேயர் அலுவலக பெண் தபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. பணிக்கு வரும் போது லிப்ஸ்டிக் பூசி வந்த காரணத்தினால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக பெண் தபேதார் மாதவி தெரிவித்திருக்கிறார். மாதவி தனது பணிகளை சரியான முறையில் செய்யாததே பணியிட மாற்றத்திற்கு காரணம் என மேயர் அலுவலகம் சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சமூக நீதி பேசும் திராவிட மாடல் அரசின் மற்றொரு சமூக அ நீதி என்று பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார் தமிழிசை. பெண் தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியின் பெண் கவுண்சிலரான உமா ஆனந்தன் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சித்துள்ளார்.
திமுகவில் எழுபது, என்பது வயது கொண்டவர்கள் எல்லாம் இளைஞர்கள் என்றும் சொல்லி வருபவர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னை விட இரண்டு வயது மூத்தவர் என்றும், தன்னை பாட்டி என்று அழைக்கிறார்கள். அப்படி என்றால் தன்னை விட இரண்டு வயது மூத்தவரான ஸ்டாலினை எப்படி அழைப்பார்கள் என கேள்வியும் எழுப்பியிருந்தார்.
தாமதமாக வந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், தாமதத்திற்கான காரணத்தையும் மாதவி சொல்லியிருக்கிறார்.
ஆனால் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வந்ததால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாதவி சொல்லியுள்ள நிலையில், மாநகராட்சி கூட்டத்தில் பெண் தபேதார் பணியிட மாற்றம் குறித்து தான் பேசத் தயார் என்றும், மாதவிக்காக தானும் லிப்ஸ்டிக் பூசி வர தயாராக இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் பெண் கவுண்சிலரான உமா ஆனந்தன் சொல்லியிருக்கிறார்.