பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். பாஜவின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா நெல்லை, மாவட்டத்தில் கட்சி சார்ந்த சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் எச்.ராஜா, அப்போது தமிழகத்தில் பத்து லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது, இது வரவேற்கத்தக்கது என்றார்.
அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது, அதில் திமுக – விசிகவின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு, மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மது விலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது என சொல்லியிருந்தார்.
மத்திய அரசு மது விலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என சொல்லுவது போலி நாடகம் எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நிறைவேற்றியது என்றும் சொன்னார்.
மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டிய அரசு தற்போது செயல் இழந்து கிடக்கிறது, 2026ம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும் என பாஜகவின் எச்.ராஜா திருநெல்வேலியில் நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் சொல்லிருந்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…