latest news
என்னது ஒரு பாட்டில் தண்ணீர் ஒரு லட்சத்துக்கு மேலயா…? அப்படி என்ன ஸ்பெஷல் இதுல…
ஜப்பானில் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒரு லட்சத்திற்கு மேல் விற்பனையாகி வருகிறது.
மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தண்ணீர். ஆனால் தற்போது ஆடம்பரத்திற்காக விதவிதமாக தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் உலகில் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக ஜப்பானில் தயாரிக்கப்படுவது பிலிகோ ஜுவல்லரி வாட்டர்.
இதன் ஒரு லிட்டர் விலை 1,390 டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் இருக்கும். அப்படி என்ன இதில் விசேஷம் என்றால் மிக மிக தூய்மையான தண்ணீர் ஆடம்பரமான பாட்டில்களில் நிரப்பப்பட்டு விற்பனையாகி வருகின்றது. இந்த பாட்டில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
விலை உயர்ந்த கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளை கொண்டுள்ளது. இதில் நிரப்பப்படும் நீர் ஜப்பானில் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் ஆகும். மிக உயர்தரமாக இருக்கும். ஆடம்பரத்தை விரும்புவோர் தயங்காமல் பணத்தை கொடுத்து இந்த தண்ணீருடன் அந்த ஆடம்பர பாட்டிலையும் வாங்கி வருகிறார்கள்.