உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருப்பவர் ஜஸ்பிரிட் பும்ரா. டி20 உலக கோப்பையில் இந்தியா கப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததும் பும்ரா தான். பும்ராவிடம் சமீபத்தில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்தபோது 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் கால் வைத்தவர் பும்ரா. முதலில் சாதாரணமாக தொடங்கிய அவரின் கேரியர் தற்போது மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களிடம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்திய அணியில் பும்ரா டோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என மூன்று கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறார். இதைத்தொடர்ந்து இவரிடம் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், தோனியின் தலைமையில் விளையாடிய போது பாதுகாப்பாக உணர்ந்தேன்.
விராட் கோலியின் கீழ் விளையாடிய போது பிட்னஸ் ஆக எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். ரோகித் சர்மா தலைமையின் கீழ் விளையாடிய போது கொஞ்சம் வித்தியாசமானது. ஒவ்வொரு வீரரிடம் தன்னைப் பொருத்திப் பார்ப்பார். இருக்கும் எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.
அவரின் கீழ் அதிக காலம் விளையாடியது பெருமையாக நினைக்கிறேன். இருந்தும் சிறந்த கேப்டன் யார் என்றால் நான் தான். நானும் சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறேன். சிறந்த கேப்டன்கள் இந்திய அணிக்குள் இருந்தாலும் என்னை பொறுத்தவரை நான் தான் சிறந்த கேப்டன் என கலகலப்பாக தெரிவித்திருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…