latest news
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிகளுக்கு மட்டுமே தான் செல்ல வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. ஏ.டி.எம்.கள் அறிமுகத்திற்கு பின்னர் வங்கிக்கு செல்ல தேவையில்லாத நிலை உருவாகியது. இணையதள பணப்பரிமாற்ற சேவை அறிமுகங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது மிகவும் எளிதான ஒன்றாகவே மாறிவிட்டது.
மொபைல் ஆப்கள் மூலம் உட்கார்ந்த இடத்திலேயே பணம் அனுப்பும் வசதியும் வந்து விட்டதால் ஏ.டி.எம். களுக்கு செல்வது கூட தவிர்க்கக் கூடிய பயணமாக மாறி விட்டது. இது போன்ற பணப்பரிவந்தனைகள் ஒரு பக்கம் எளிமையான ஒன்றாக தெரிந்தாலும், இதன் மூலம் நடக்கும் ஏமாற்று வேளைகளால் பலர் பாதிப்படைந்த செய்திகளும் காதுகளை வந்தடைந்து கொண்டு தான் இருக்கிறது.
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்ற போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தனது முகம் தெளிவாகத் தெரியும் விதமாக போஸ் கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பரப்பாடி பகுதியைச் சேர்ந்த கட்டிட ஓப்பந்தகாரரின் பர்ஸை திருடிச் சென்றதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த ஏ.டி.எம். அட்டையின் மூலம் பத்தாயிரம் ரூபாயை எடுத்த முத்துக்கிருஷ்ணன் என்ற கட்டுமானத் தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தனக்கு இருந்த மறதியின் காரணமாக ஏ.டி.எம்.பாஸ்வேர்டை துண்டுச் சீட்டில் எழுதி பர்ஸில் வைத்திருக்கிறார் கட்டிட ஒப்பந்தக்காரர். அவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த போது அருகே நின்று இதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன அவரது பர்ஸை திருடியதோடு மட்டுமல்லாமல் ஏ.டி,எம்.அட்டையின் மூலம் பத்தாயிரம் ரூபாயையும் திருடி இருக்கிறார்.
பணம் எடுக்கும் போது அங்கிருந்த கேமராவை உற்றுப் பார்த்ததன் விளைவாக முத்துக்கிருஷ்ணன் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார். அவர் திருடிய பர்ஸிற்குள்ளே ஏற்கனவே ஐந்தாயிரம் ரூபாய் பணமும் இருந்துள்ளது.