மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும் வரை வெளியேற்ற கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
பிபிடிசி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து உள்ளிட்ட நான்கு தேயிலைத் தோட்டங்களை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் இந்தத் தேயிலைத் தோட்டங்களில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், குத்தகை காலம் வரும் 2028ம் ஆண்டோடு பிபிடிசி நிறுவனத்துக்கு முடிவடைகிறது. இதை தொடர்ந்து ஒப்பந்தத்தினை முடித்து ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் வகையில் 3 நோட்டீஸ்களை அந்நிறுவனம் வழங்கியது.
இந்நிலையில், தேயிலைத் தோட்டத்தில் நிறுவனம் சார்பில் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புகளை உடனே காலி செய்து கொடுக்கும்படி நான்காவது நோட்டீஸும் பிபிடிசி நிறுவனத்தால் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், குறிப்பிட்ட நோட்டீஸில் விருப்ப ஓய்வு மனுவை தொழிலாளர்கள் கொடுக்க ஜூன் 15-ம் தேதி கடைசி நாள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால், தேயிலைத் தோட்டங்களில் இருந்து தங்களை விரைவாக வெளியேற்ற பிபிடிசி நிறுவனம் முயற்சிப்பதாகத் தொழிலாளர்கள் தரப்பு குற்றம்சாட்டி இருக்கின்றனர். நான்கு தலைமுறைகளாக வசிப்பவர்களை வெளியேற்றுவதால் எங்கே செல்வது என தெரியாமல் நிற்கின்றனர்.
இதை தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்த மனு மீதான விசாரணையில், தொழிலாளர்களுக்கு இலவச மனைப் பட்டா, கலைஞர் திட்டத்தின் கீழ் வீடு, அங்கன்வாடி அல்லது ரப்பர் தோட்டம் மற்றும் சரணால பகுதிகளில் வேலை அமைத்து கொடுக்கப்பட வேண்டும். மறுப்பணி வழங்கும் வரை மாதம் 10000 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
தோட்ட தொழிலாளர்களுக்கு இத்தகைய மறுவாழ்வு வசதிகளை அளிக்காத வரை வசதிகளைச் செய்துதரும் வரை யாரையும் அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் உரிய விளக்கம் கொடுக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…