Cricket
கேப்டன் அஸ்வின் முடிவால் அடி வாங்கிய திண்டுக்கல் அணி… அசால்ட்டாக தட்டிய சேலம் அணி…
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சேலம் ஸ்டார்ட்டான்ஸ் அணி எதிர்கொண்டது. சேலம் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
வித்தியாசமாக ரவிச்சந்திரன் அஸ்வின் துவக்க ஆட்டக்காரராக சிவம் சிங்குடன் களமிறங்கினார். ஆனால் அவரின் கணிப்பு தவறிவிட அஸ்வின் 6 ரன்களிலும், சிவம் 2 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மிடில் ஆர்டரில் விளையாடிய பாபா இந்திரஜித் மற்றும் விமல் குமார் முறையே 51 மற்றும் 47 ரன்கள் எடுத்தனர். இதனால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக சேலம் அணியை சேர்ந்த ஹரிஷ் குமார் மற்றும் சன்னி சந்து தலா 2 விக்கெட்களை எடுத்தனர். இதை தொடர்ந்து சேலம் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
அபிஷேக் மற்றும் கவின் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி தலா 28 மற்றும் 46 ரன்களை எடுத்திருந்தனர். மேலும், ஆர் விவேக் 51 ரன்கள் எடுத்து சேலம் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். திண்டுக்கல் அணியில் அஸ்வின் மற்றும் வருண் சக்கிரவர்த்தி இருந்தும் அந்த அணி தோல்வியை தழுவியது. அஸ்வினின் முடிவு திண்டுக்கல் அணிக்கு பாதகமாக அமைந்தது.