பிரேக் போடுவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் குளத்திற்கு நடுவே பாய்ந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
தெலுங்கானா மாநிலம், ஜங்கானில் குளத்தை ஒட்டி இருந்த வயல்வெளி ஒன்று கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சி எடுத்து வந்திருக்கின்றார். அப்போது அவருக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்த நபர் பிரேக் போடுங்கள் என்று கூறி இருக்கின்றார். ஆனால் அந்த நபரோ பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார்.
இதனால் கார் பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குள் பாய்ந்தது. குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை தொடர்ந்து இருவரும் காரை விட்டு வெளியில் வந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்கள். இருவருக்குமே நீச்சல் தெரியும் என்பதாலும் குளம் ஆழமாக இல்லை என்பதாலும் இருவரும் உயிர் தப்பித்து விட்டனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதி வேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதற்காக போலீசார் அவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். இது தொடர்பான வீடியோவானது இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் முதலில் பிரேக் எது அச்சிலேட்டர் எது என்பதை தான் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…