Cricket
மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ‘டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்’ அணிக்காக விளையாடி வருகிறார். 2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டி ஒன்றில் திருடப்பட்ட உணர்வு ஏற்பட்டதாக ஆன்ட்ரே ரசல் மன வருத்தம் தெரிவித்துள்ளார்.
பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் இருந்த மின்விளக்கு சரியாக இயங்காமல் போனது. இதனால், போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் துவங்கியது. போட்டி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டி.எல்.எஸ். விதிப்படி எதிரணிக்கு வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடி அரைசதம் காரணமாக பார்படோஸ் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டியில் பார்படோஸ் ராயல்ஸ் அணி பேட் செய்து கொண்டிருந்த போது சரியாக 19.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை குவித்து இருந்த போது மைதானத்தின் மின்விளக்குகள் செயல்படாமல் போனது. இதைத் தொடர்ந்து பத்து நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் துவங்கியது.
அப்போது ஐந்து ஓவர் போட்டியில் ராயல்ஸ் அணி வெற்றி பெற 60 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை துரத்தும் போது டேவிட் மில்லர் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இது குறித்து கோபமுற்ற ஆன்ட்ரே ரசல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இணையத்திற்கு வந்து எனது கருத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர் நான் இல்லை, ஆனால் இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரை பொருத்தவரை நான் திருடப்பட்டதாக உணர்கிறேன். அந்த சூழல்…, சரியாக அந்த நேரத்தில் மின் விளக்குகளில் பிரச்சினை ஏற்பட்டது.. அதன்பிறகு 30 பந்துகளில் 60 ரன்கள் எனும் இலக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய… ஆம் ஆன்ட்ரே ரசல் சரி என்று கூறியது சரி தான்.. … ஆனால் இது உண்மையான …,” என்று குறிப்பிட்டுள்ளார்.