`அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.. என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது’ என்று சசிகலா தெரிவித்திருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – கட்சியை ஒருங்கிணைக்க நடக்கும் முயற்சி என கடந்த சில நாட்களாக அதிமுகவைச் சுற்றி பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில், சென்னை போயஸ் கார்டனில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், `தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்குப் போனதற்கு யார் காரணம்? அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களைச் சந்திப்பேன். 2026-ல் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்.
ஜெயலலிதா சாதி பார்க்காமல் பழகக் கூடியவர். அப்படி அவர் சாதி பார்த்திருந்தால் என்னுடன் பழகியிருப்பாரா? நானும் சாதி பார்க்க மாட்டேன். அப்படி பார்த்திருந்தால், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கியிருப்பேனா? அதிமுகவில் சாதி வந்துவிட்டது. தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக் கூடாது. யாரையும் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை அதிர்ச்சி… காரை வழிமறிந்த முகமூடி கும்பல்… டிரைவரின் சாமர்த்தியத்தால் தப்பிய நபர்கள்!
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…