கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் விதவைகளாகி விட்டனர். பல குழந்தைகள் தந்தையை இழந்திருக்கிறார்கள்.
நேற்று காலை முதலே கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளிவந்தது. முதலில் 3 பேர் மரணம் என துவங்கிய செய்தி, போகப்போக இறப்பு என்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. நேற்று இரவு பலி எண்ணிக்கை 40ஐ தாண்டியது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மக்கள் குடித்த சாராயத்தில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் விஷமாக மாறியதே பலரின் உயிர் போனதற்கு காரணம் என்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்தது.
எனவே, எங்கிருந்து மெத்தனால் வாங்கப்பட்டது என சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில், ஆந்திராவில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இருந்து கெட்டுப்போன மெத்தனாலை மாதேஷ் என்பவர் வாங்கி வந்து புதுச்சேரியில் சின்னதுரை என்பவரிடம் விற்பனை செய்திருக்கிறார். இவர்தான் கள்ளச்சாரத்தில் அந்த மெத்தனாலை கலந்து கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்திருக்கிறார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…