Connect with us

latest news

அதிரடி ரெய்டு.. 100 கோடி விவகாரம்… எம்எஸ் விஜயபாஸ்கரை வலைவீசி தேடும் சிபிஐசிஐடி போலீஸ்…!

Published

on

தலைமறைவாக இருக்கும் முன்னால் அமைச்சர் எம்எஸ் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எம்ஆர் விஜயபாஸ்கர் போலி பத்திரத்தை தயார் செய்து அதனை பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக பிரகாஷ் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, இதன் காரணமாக எம் எஸ் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் எம் ஆர் விஜயபாஸ்கரின் முன்ஜாமினை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.

இதனால் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக வரை தேடி வருகிறார்கள். மேலும் கரூரில் எம் எஸ் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அவரின் வீட்டில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எம் எஸ் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மற்றும் மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வீட்டிலும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றது. எம் ஆர் விஜயபாஸ்கரின் உறவினரான வேலாயுதம் பாளையம் பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *