govt update news
அட என்னங்க..இன்னுமா இந்த விஷயத்த பண்ணல..பண்ணாதவங்க இந்த நேரத்தை யூஸ் பண்ணிகோங்க..
தற்போது மத்திய அரசு ஆதார் கார்டு சம்பந்தமாக பல செய்திகளை வெளியிட்டு கொண்டு வருகிறது. ஆதார் கார்டினை நமது மற்ற சான்றுகளுடன் இணைக்கும்படியான அறிவிப்பினை வெளியிட்டது. அப்படிப்பட்ட வரிசையில் நமது ஆதார் கார்டினை நமது குடும்ப அட்டையுடன் இணைக்கும்படி வலியுறுத்தியது.
தற்போது இந்த தேதியினை மீண்டும் நீட்டித்துள்ளது. இதன்படி நமது ஆதார் கார்டினை நமது குடும்ப அட்டையுடன் வருகின்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என கூறியுள்ளது. முன்னதாக இந்த தேதியானது ஜுன் 30 என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவலை நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குடும்ப அட்டை வைத்துள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களின் ஆதார் கார்டினை குடும்ப அட்டையுடன் இணைத்தல் அவசியம். இவர்களே அரசின் அந்தோத்யா அன்ன யோஜனா எனும் திட்டத்திற்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
இந்த இணைப்பானது மத்திய அரசின் ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. மேலும் இவ்வாறு செய்வதின் மூலம் ஒரு நபரே ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை தவிக்கலாம்.
ஆதார் கார்டினை குடும்ப அட்டையுடன் இணைப்பது எவ்வாறு?:
- இதற்கு முதலில் நமது மாநிலத்தில் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ http://www.tnepds.co.in இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் Link Aadhaar card with Ration card என்ற பட்டனை அழுத்தவும்.
- அதில் நமது குடும்ப அட்டை எண்ணை உள்ளீடாக செலுத்தவும்.
- பின் Link Aadhaar and Mobile Number என்ற பட்டனை அழுத்தவும். இப்போது அதில் ஆதார் எண்ணை கொடுக்கவும்.
- இப்போதும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP–யானது வந்து சேரும். இந்த OTP-யினை அதில் கொடுக்கவும்.
- பின் Link என்ற பட்டனை அழுத்தவும். இப்போது நமது மொபைலுக்கு இணைந்து விட்டதாக குறுஞ்செய்தி வரும்.
இந்த நிகழ்விற்கு எந்த வித கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்னும் ஆதார்-குடும்ப அட்டையை இணைக்காதவர்கள் இந்த காலத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.