Categories: latest newstamilnadu

தள்ளிப்போகுதா தவெக மாநாடு?…தலைகால் புரியாமல் தவிக்கும் தளபதி ரசிகர்கள்…

 

நடிகர் விஜய் நடித்துள்ள “தி கோட்” திரைப்படம் இம்மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் விஜயின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கும் என அவரது தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தது. காரணம் நடிகர் விஜய் அரசியலில் தீவிரம் காட்டப்போவதாக அறிவித்ததால்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது புதிய கட்சியை துவங்கியிருக்கும் விஜய், சமீபத்தில் கட்சிக் கொடியையும், கொடிப்பாடலையும் வெளியிட்டார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வருகிற இருபத்தி மூன்றாம் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

Tvk

ஆனால் இந்த மாநாடு அடுத்த மாதமான அக்டோபருக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி இருப்பதாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.

மாநாடு நடத்தப்பட உள்ள தேதி குறித்த உறுதியான அறிவிப்பை காவல் துறையினரிடம் செப்டம்பர் பதிமூன்றாம் தேதியன்று தெரிவிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் மாநாடு முன்னர் சொன்னப்பட்ட தேதியில் நடத்தப்படுமா? அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படுமா? என்ற குழப்பமான நிலை விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்திடம் காவல் துறையினர் சார்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதில்களும்,  விளக்கமும் விஜய் கட்சி சார்பில் சொல்லப்பட்டிருந்தது.

sankar sundar

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago