Connect with us

govt update news

சைலண்டாக ஸ்பீடெடுக்கும் சண்டிபுரா வைரஸ்?…மருந்துகள் இல்லாததால் நிலவும் அச்சம்…

Published

on

Chandipura Virus

கொரனா இந்த பெயரை வாழ் நாளின் இறுதி வரை மறக்கமாட்டார்கள் இருபத்தி ஓறாம் நூற்றாண்டு மக்கள். சீனாவிலிருந்து வந்து தனது தாக்குதலை உலகம் முழுவதும் நடத்தியது இந்த கொடிய வகை வைரஸ். ஆயிரக்கணக்கான உயிர்பலி செய்திகள் தினசரி உலுக்கி வந்தது உலகத்தையே.

பரவலின் வேகமும், நோயின் தாக்கமும் அதிகமாக இருந்த நேரத்தில் மருந்துகள் ஏதுமில்லாததால் காவு வாங்கி ருத்ரதாண்டவத்தை ஆடி வந்தது கொரனா. ஒரு வழியாக தனது கோர தாண்டவத்தை குறைத்து செயலிழக்கத்துவங்கியது இந்த வைரஸ். அதன் பிறகே இந்த உலகம் நிம்மதிப் பெருமூச்சை விடத்துவங்கியது.

அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்து வந்த வகை வகையான வைரஸ் காய்ச்சல்களை எல்லாம் மருத்துவ வளர்ச்சிகள் வீழ்ச்சியடையச்செய்தது. இப்போது புதிய வகை வைரஸ் வட மாநிலங்களில் தனது பரவலை துவங்கியிருக்கிறது.

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் தனது பரவலை ஆரம்பித்தது சண்டிபுரா வைரஸ். பெரும் அளவில் குழந்தைகளையே அதிக பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இந்த வைரஸிற்கு இதுவரை எட்டு பேர் பலியாகியுள்ளனர். மணல் ஈக்கள், உன்னி, கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Hospita

Hospital

இந்த தொற்று பாதித்தவர்களுக்கு காய்ச்சல், தகை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, வலிப்பு அறிகுறிகளாக இருந்து வருகிறது. அதீத காய்ச்சலால் எழுபத்தி இரண்டு மணி நேரத்தில் மரணம் வரை கொண்டு செல்லும் இந்த வகை வைரஸிற்கு இதுவரை எந்த தடுப்பு மருந்துகளோ, ஊசிகளோ கிடையாது.

இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை நோய் தடுப்பு வழி முறைகளை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் கால்களில் காலணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது வீடுகளைச் சுற்றி பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்கவும், பூச்சிக்கடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமான ஆடைகளை அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

google news