Connect with us

Finance

நல்லா பாத்தா நாற்பது தான்!…ஆனா அதுவும் நல்லதுக்கு தான்?…தங்கம் விலை…

Published

on

Gold

தங்கம் இந்தியா போன்ற நாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறி வருகிறது. இங்கு பண்டிகைகளும்,
சடங்குகளும் அதிகம் என்பதால் தங்கத்திற்கான தேவையும், தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

விலை உயர்வு வின்னை முட்டும் அளவில் சென்றாலும் அதனையும் பொருட்படுத்தாமல் தங்கத்தினை வாங்குவதற்கான தனி கூட்டம் இருந்தும் வருகிறது. அத்தியாவசிய தேவையாக மாறி விட்ட நிலைக்கு வந்திருக்கிறது தங்கம் இப்போது என்று தான் சொல்ல
வேண்டும்.

நடுத்தர வாசிகள் கூட தங்களது வருமானத்திற்கு ஏற்றார் போல தங்கத்தை வாங்குவதாலும், தங்கம்
ஆபரண உலோகங்களில் அதிக கவனத்தினை பெற்று வருகிறது.  சர்வதேச பொருளாதார சூழல்,
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இவற்றைக் கொண்டே தான் தங்கத்தின் விலை
நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் தான் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து கொண்டே வருகிறது.

Silver

Silver

சென்னையில் இன்று விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரண்த் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று
குறைந்துள்ளது.

பெரிய அளவிலான வீழ்ச்சியாக இல்லாத போதிலும், இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை
வந்திருப்பது வரவேற்கும் விதமாக மாறியிருக்கிறது. கிராம் ஒன்றிற்கு இன்று ரூபாய் ஐந்து (ரூ.5/-)
குறைந்துள்ளது. ஏழாயிரத்து நூற்றி இருபது ரூபாய்க்கு (ரூ.7,120/-) நேற்று விற்கப்பட்ட தங்கம் இன்று ஏழாயிரத்து நூற்றி பதினைந்து ரூபாய்க்கு (ரூ.7,115/-) விற்கப்படுகிறது.

இதே போல நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐம்ப்த்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறபது ரூபாய்க்கு (ரூ.56,960/-) விற்கப்பட்டு வந்தது. விலை சரிவின் காரணமாக இன்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய்க்கு (ரூ.56,920/-) விற்கப்பட்டு வருகிறது.

ஆனால் வெள்ளியின் விலையில் இன்று எந்த வித மாற்றமும் தென்படவில்லை. நேற்று விற்கப்பட்ட அதே விலையில் தான் இன்றைய விற்பனையும் தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றும் இன்றும் நூற்றி மூன்று ரூபாயாகவே (ரூ.103/-) இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைப் போலவே ஒரு லட்சத்து மூவாயிரம் (ரூ.1,03,000/-) ரூபாயாகவே இருந்து வருகிறது.

google news