Connect with us

Finance

அட்ராசக்க குறைந்து வரும் தங்கம் விலை…மீண்டும் இறங்கு முகத்தில்…

Published

on

Gold

தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் வின்னை முட்டும் அளவில் உயர்ந்து அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து வந்தது. புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ஏழாயிரம் ரூபாய் வரை சென்றது, ஆபரணப் பிரியர்களுக்கு இது அதிர்ச்சி கொடுத்து கவலையை அதிகரிக்கச் செய்தது. இந்த அக்டோபர் மாதத்திலும் பல நாட்கள் அதே போல உயர்வினையே சந்தித்து வந்தது தங்கத்தின் விற்பனை விலை.

கடந்த வாரமும் அடுத்தடுத்து ஏறுமுகத்தில் சென்று நடுத்தர வாசிகளின் தங்க நகைக் கனவை  கலைத்தே வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நிலைமை உல்டாவாக மாறி வருகிறது. திடீரென இறங்கு முகத்திற்கு வந்திருக்கும் தங்கத்தின் விலையால் மகிழ்ச்சி லேசாக தலை தூக்கது துவங்கியுள்ளது. ஒரு சவரனுக்கு நேற்று நாற்பது ரூபாய் குறைந்து ஆறுதல் தந்த தங்கத்தின் விலை இன்றும் அதே போல குறைந்தே காணப்பட்டது.

சென்னையில் இன்று விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இருபது ரூபாய் குறைந்துள்ளது.

Silver

Silver

 

ஒரு கிராம் ஏழாயிரத்து நூற்றி பதினைந்து ரூபாய்க்கு (ரூ.7,115/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7,095/-)_ விற்கப்பட்டு வருகிறது. ஒரு சவரனின் விலை நேற்றை விட இன்று நூற்றி அறுபது ரூபாய் (ரூ.160/-) குறைந்துள்ளது.

ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய்க்கு (ரூ.56,920/-) விற்கபட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரனுக்கு ஐம்பத்தி ஆறாயிரத்து எழனூற்றி அறுபது (ரூ.56,760/-) ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அடுத்தடுத்து இரண்டு நாட்களாக குறைவினை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இது போல மேலும் குறையாதா என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. தங்க்ம் இப்படி அடுத்தடுத்து மாறுபாடுகளை காட்டி வர, வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்று விற்கப்பட்ட அதே விலையில் இன்று விற்கப்படுகிறது.

நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ.103/-) விற்பனையாகி வருகிறது ஒரு கிராம் வெள்ளி இன்று. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாயாக (ரூ.1,03,000/-)இருந்து நேற்றை விற்கப்பட்ட அதே விலையில் நீடிக்கிறது.

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *