நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தரும் தகவலை சொல்லியிருக்கின்றனர். இதனால் ஒரு நாளுக்கு இருபத்தி நாலு மணி நேரம் என்பதில் கூட மாற்றமிருக்கும் என்ற ஆச்சர்யம் தரக்கூடிய தகவலையும் சொல்லியிருக்கின்றனர்.
பூமியிலிருந்து நிலவு ஆண்டுக்கு சுமார் மூனு புள்ளி எட்டு சென்டிமீட்டர் வீதம் விலகிச் செல்கிறது. இந்த நகர்வு பூமியில் நாட்களின் நீளத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவின் விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இருபத்தி நான்கு மணி நேரம் என்பது தற்போது பூமியில் ஒரு நாளாக இருந்து வருகிறது. நிலவு விலகிச்செல்வதால் இது இருபத்தி ஐந்து மணி நேரமாக அதிகரிக்கக்கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இது போன்ற மாற்றம் அடிக்கடி நடக்காது என்றும், இருபது கோடி ஆண்டுகளுக்குப் பிறகே தான் நிகழும் என்ற ஆறுதல் தரும் செய்தியையும் தங்களது ஆராய்ச்சி முடிவின் கருத்தாக சொல்லியுள்ளார்கள்.
நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் பதினெட்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாக ஆய்வில் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அது பல ஆண்டுகளுக்கு பின்னர் இருபத்தி நாலு மணி நேரமாக மாறியிருக்கிறது.
இந்த மாற்றத்திற்கு பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையே முக்கிய காரணம் என்றும், நிலவி பூமியிலிருந்து விலகி செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும், நிலவு பூமியை விட்டு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகமும் குறைவதால் பகல் நேரம் அதிகரிக்கும் எனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…