latest news
சென்னையில் 6000 ரவுடிகளின் பட்டியல் லிஸ்ட்… ரெண்டே நாள் தான்… கமிஷனர் அருணின் ஃபர்ஸ்ட் மூவ்…!!
சென்னையில் குற்றப் பின்னணியில் உள்ள 6000 ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் தொடர்பான மொத்த தகவலையும் இரண்டு நாட்களில் அறிக்கையாக அளிக்கும்படி சென்னை கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ் ராங் கடந்து ஐந்தாம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் வீட்டின் அருகே இந்த சம்பவம் அரங்கேறியது. இது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கடுமையாக பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சட்ட ஒழுங்கு ஆணையராக அருண் பொறுப்பேற்று இருக்கின்றார். இவர் பொறுப்பேற்றது முதலே சட்ட ஒழுங்கை பாதுகாப்பதே முக்கியம் என்றும் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் சொல்லிக் கொடுக்கப்படும் என்று மிரட்டலாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சென்னை கமிஷனர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் குற்றங்களின் ஈடுபட்ட 6000 குற்றவாளிகள் குறித்த முழு விவரங்களை இரண்டு நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் உத்தரவிட்டிருந்தார். தற்போது சிறையில் உள்ள 700 ரவுடிகளின் விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
மேலும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் , திருடர்கள் என 6000 குற்றவாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று அங்கு தான் இருக்கிறார்களா? அங்கு இல்லையா? என்பதை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். ஒரு காவல் நிலைய எல்லையில் கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பு குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர்கள் கைது செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறும் பட்சத்தில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நேரடியாகவும் ரகசியமாகவும் தொடர்பிலுள்ள காவல் துறையினர் குறித்த பட்டியலை உளவுத்துறை இடம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.