latest news
விரைவில் அம்மா உணவகத்தில் புது மெனு!.. ஏழைகளுக்கு மகிழ்ச்சி கொடுத்த அரசு!…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். ஏழைகளின் பசியாற்ற துவங்கப்பட்ட இந்த உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 1.50 காசுக்கு சப்பாத்தி, தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் தலா 5 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைந்து அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சி வந்த பின்னரும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதுவும், அம்மா உணவகம் என்கிற பெயரிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்மா உணவகத்தில் புது வகையான உணவுகளை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது.
சென்னையில் 391 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டு 11 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் பல கட்டிடங்கள் பழுதாகியுள்ளது. மேலும், சமையல் பாத்திரங்களும் பழையதாகிவிட்டது. அதேபோல், பல உணவகங்களில் மேஜைகள் மற்றும் நாற்காலிகளின் கால்கள் உடைந்துவிட்டது. எனவே, சென்னை மாநகராட்சி அம்மா உணவங்களை புதுப்பிக்க முடிவெடுத்திருக்கிறது.
எனவே சுமார் ரூ.5 கோடி செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் புதுக்கப்படவிருக்கிறது. வருடத்திற்கு 120 கோடி செலவாகிறது. ஆனால், அரசுக்கு வருவதோ 20 கோடி மட்டுமே. அதாவது ரூ.120 கோடி நஷ்டத்தில்தான் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. எனவே, சாப்பிட வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்டுவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.