Connect with us

latest news

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!.. வானிலை மையம் அறிவிப்பு

Published

on

rain

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழையும் பெய்யும், வெயில் அடிக்கும் என சென்னை வானிலை மையம் மாறி மாறி செய்திகள் வெளியிட்டு வருகிறது. 5 நாட்களுக்கு புதுவை மற்றும் காரக்கால் பகுதியில் மழை பெய்யும் என 2 நாட்களுக்கு முன்பு வானிலை மையம் அறிவித்தது.

நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னையில் கன மழை பெய்தது. மேலும், வருகிற 22ம் தேதி சனிக்கிழமை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 22ம் தேதி தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிலும் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் பகுதிகளிலும் மழை பெய்யும். அடுத்து 23, 24 தேதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

google news