கடந்த 3 வாரங்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இடையில் சில நாட்கள் வெயிலும் அடிக்கிறது. அதேநேரம், சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்தது. எனவே, வெயிலின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்கிறது.
சென்னை வானிலை மையமும் தொடர்ந்து மழை செய்திகளை சொல்லி வருகிறது. கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தொடர்ந்து 5 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் கூறி இருந்தது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைப் பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இன்றும் நாளையும் சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், 27ம் தேதி தமிழகத்தில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
அதேபோ 28ம் தேதி மற்றும் ஜூலை 1ம் தேதி தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரின் சில பகுதிகளில் மலை மற்றும் இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடி மழை பெய்யும் எனவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…