தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளிக்கு பதிலளித்தார். தமிழ் நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது என உறுதிபட தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு இந்த பதிலை ஸ்டாலின் சொல்லியிருந்தார். தென் மேற்கு பருவ மழை இயல்பை விட அதிகமாக பெய்த நிலையில் மழை நீர் அதிகமாக தேங்கியிருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலிடனிடம் தனது கேள்வியை முன் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின் யார் சொன்னா? என செய்தியாளரைப் பார்த்து கேட்டார். பின்னர் எங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது, வந்து காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் என கேட்டார்.
வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதா என மற்றொரு செய்தியாளர் தனது கேள்வியை முன் வைத்தார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எப்படிப் பட்ட மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்.
தொடர்ச்சியாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க கோரிக்கைகள் வலுத்து வருகிறது, இதனை முதல்வர் பரிசீலிப்பாரா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என கேள்விக்கான தனது பதிலை சூசகமா சொன்னார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…