latest news
உதயநிதியின் புதிய உதயம்?..முதல்வர் ஸ்டாலின் சூசகம்…
கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் புதிய சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை பார்வையிட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதோடு அதே பகுதியில் 4.23 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி கட்டிடத்தினையும், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், புதிதாக அமையவுள்ள வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதய நிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டு வருவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார்.
மாற்றம் இருக்கும், ஆனால் ஏமாற்றம் இருக்காது என முதலைமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில் அமைச்சவரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதனையும் உதய நிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதையும் உறுதி செய்வது போலவே அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் தொடர் வேண்டுகோளாக இருந்து வருவது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது என்ற நிலையில், ஆளும் திமுகவின் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் இதற்கு ஒத்துப்போகும் விதமாகவே பேசி வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சொல்லியுள்ள பதில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதை அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவது போலே தான் பார்க்கப்படுகிறது.
அன்மையில் முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப் பயணம் குறித்த எதிர்கட்சியின் கேள்விகள் குறித்து பதிலளிக்கையில் முதலீடுகல் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள தெளிவான விளக்கமே வெள்ளை அறிக்கை என்றார். அதோடு வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக இப்போதே தயாராக இருக்கிறது என்றும் பதிலளித்தார்.