டெஸ்லா ஸ்கிரீனில் உள்ள பிழையை சரி செய்து கொடுக்கும்படி சிறுமி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அதற்கு எலான் மஸ்க் பதிலளித்து இருக்கின்றார்.
உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மாஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான இவர் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகின்றார். இவரிடம் சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு கோரிக்கையை வைத்திருக்கின்றார். அதாவது சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பிய படம் ஒன்றை வரைந்து இருக்கின்றார்.
அப்போது திடீர் திடீரென்று அந்த படங்கள் காணாமல் போனது. இதனால் கவலையடைந்த சிறுமி இது ஒரு பிழை, இதனை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் தன்னுடைய செயலை ஒரு வீடியோவாக எடுத்து எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கை டேக் செய்து பதிவு செய்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது “ஹலோ மிஸ்டர் மஸ்க். நான் சீனா மாகாணம் மோலியிலுள்ள பகுதியில் வசித்து வருகிறேன். என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியதுதான். நான் வரையும் படமானது சில நேரங்களில் மறைந்து விடுகின்றது. பின்னர் இதுபோன்று ஒரு கோடு வருகிறது. நீங்கள் இதை பார்க்கிறீர்கள் அல்லவா? இதை சரி செய்ய முடியுமா? என்று கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் நிச்சயமாக என்று கூறி இருக்கின்றார். இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…