latest news
ஃபாலோயர்கள் கொடுத்த சவாலை கேட்டு அதிகமாக சாப்பிட்டு இறந்த யூடியுபர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
24 வயதாகும் சீனாவை சேர்ந்த இன்ப்ளூயன்சர் லைவில் சாப்பாடு சேலஞ்சை மேற்கொண்ட போது திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜூலை 14ந் தேதி ஹான்க்யுங்கில் நடந்து இருக்கிறது.
பான் ஸியோட்டிங் என்ற யூடியுபர் சாப்பாட்டில் சேலஞ்சை செய்து வீடியோ பதிவு செய்து வெளியிடுவது வழக்கம். இதனால் அவர் ஒருநாளில் 10 மணிநேரம் தொடர்ச்சியாக உணவருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சீனா மீடியாக்கள் கூறும்போது, ஸியோடிங் ஒரு வேளைக்கு சராசரியாக 10 கிலோ வரை உணவாக எடுத்து கொள்வாராம்.
இதை செய்ய வேண்டாம் என அவருடைய பெற்றோரும், நண்பர்களும் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் ஸியோடிங் அதனை மறுத்துவிட்டார். ஸியோடிங்கின் பிரேத பரிசோதனை முடிவுகள் கூறுகையில், அவர் வயிறு சிதைந்துவிட்டது. செரிமானமாகாத உணவுகளும் உள்ளே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸியோடிங்கின் இறப்பு சமூக வலைத்தளங்களில் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதையெல்லாம் சேலஞ்சாக எடுத்து ஏன் செய்ய வேண்டும். ஒருவர் சாப்பிடுவதை யார் உட்கார்ந்து பார்க்க போகிறார்கள் என பலரும் அவரது வீடியோக்கு கீழ் கமெண்ட் போட்டுவருகின்றனர்.
சமூக வலைத்தளத்தின் புகழுக்காகவும், லைக் குவிப்பதற்காகவும் உயிரை பணயம் வைத்து ரீல் செய்வதை சமீபகாலமாக பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.