Connect with us

govt update news

தங்க பத்திர திட்டம்னா என்னனு தெரியுமா?..இதுல முதலீடு செய்ய இதான் சரியான நேரம்..தகவல்கள் உள்ளே..

Published

on

sovereign gold bond

இந்த காலத்தில் தங்கத்தின் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. சாமனிய மக்கள் தங்கத்தினை வாங்குவதற்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. வரும்காலங்களில் தங்கத்தின் விலை எவ்வளவு உயரும் என கூறவே முடியாது. எனவே இப்படியான சூழ்நிலையில் நாம் இப்போதே தங்கமாக வாங்காமல் தங்க பத்திரத்தின் மீது முதலீடு செய்வதால் வருங்காலத்தில் நமக்கு அது மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். அப்படியான ஒரு திட்டம்தான் சவரன் தங்க பத்திரம் என அழைக்கப்படும் Sovereign Gold Bond(SGB). இதனை பற்றிய தகவல்களை காணலாம்.

சவரன் தங்க பத்திரம்:

sovereign gold bond

sovereign gold bond

சவரன் தங்க பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் தங்கத்தின் மீதான ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் நாம் சுத்தமான தங்கத்தின் மீது முதலீடு செய்து அதற்கான பத்திரத்தினை பெற்று கொள்ளலாம்.

யார் முதலீடு செய்யலாம்:

இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் தனி நபர் என அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும் இந்த திட்டத்தில் நாம் தங்க கட்டிகளாக வாங்குவதற்கு பதிலாக அதே விலையில் தங்க பத்திரமாக வாங்க வேண்டும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

gives 2.5% interest

Gives 2.5% interest

மேலும் இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் சாதாரணமாக நகை கடைகளுக்கு சென்று தங்கத்தை வாங்கும் பொழுது கடைக்காரர்கள் சொல்லும் விலையில் மட்டுமே வாங்க முடியும்.  நகை கடைகளில் நாம் தங்கம் வாங்கும் பொழுது நமக்கு சில நேரங்களில் விருப்பம் இல்லாமல் சில கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இந்த முறையில் நாம் அவ்வாறு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. நாம் ஒரு கிராமுக்கு எவ்வளவு தொகையோ அதை மட்டுமெ செலுத்தினால் போதுமானது.

வட்டி எவ்வளவு:

இந்த பத்திரத்தை வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கியானது வருடத்திற்கு 2.5% வட்டியாக கொடுக்கிறது. மேலும் இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். ஆனால் சில நிபந்தனைகளுடன் நாம் 5ஆம் ஆண்டு முடிவிலேயே அதனை திரும்ப பெற்றும் கொள்ளலாம். வட்டியானது ஒவ்வொரு 6 மாதத்திற்கும் கணக்கிடப்படுகிறது. இந்த வட்டியானது நமது வங்கி கணக்கிற்கு வந்து சேரும். வருமான வரி சட்டம், 1961ன் படி இதன் மீது நாம் வரியையும் கட்ட வேண்டியிருக்கும்.

தற்போது  விலை என்ன?:

தற்போது இந்த சவரன் தங்க பத்திரத்தின் கீழ் ஒரு கிராம் தங்கமானது ரூ.5926க்கு விற்கப்படுகிறது. மேலும் நாம் செலுத்தும் சந்தா தொகையை ஆன்லைனில் செலுத்தினால் நமக்கு மேலும் ரூ.50 ஒவ்வொரு கிராமிற்கும் சலுகையாக அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தங்கத்தின் விலை நாம் எப்போது தக்கத்தினை வாங்குகிறோமோ அதற்கு 3 நாட்களுக்கு முன் தங்கத்தின் விலை எவ்வாறு இருந்ததோ அதன் அடிப்படையில் அமையும். இந்த தங்கத்தின் விலையானது மும்பையில் உள்ள தங்கத்தின் விலையாகவே இருக்கும்.

எப்போது வாங்கலாம்:

இந்த சீரிஸ்-1 தங்க சவரன் பத்திரமானது ஜுன் 19-23ஆம் தேதி வரை விற்கப்படுகிறது. சீரிஸ்-2 வருகின்ற செப்டம்பர் 11-15 தேதி வரையிலும் விற்கப்படுகிறது என இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவித்துள்ளது. எனவே இவ்வாறான திட்டங்களில் சேர்ந்து நமது பணத்தினை நல்ல முறையில் சேமிக்கலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *