மாதந்தோறும் ரீசார்ஜ் செய்து சலித்தவர்களுக்கு என ஒரு செய்தி. ஜியோவின் வருடாந்திர திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு திட்டங்களை விட விலை குறைவு மற்றும் பல வசதிகளையும் பெற்றுள்ளது. ஜியோ இந்த திட்டங்களை மூன்று வகைகளில் வழங்குகிறது. அவைகளை பற்றி பார்க்கலாம்.
ஜியோ 2499 திட்டம்:
இந்த திட்டத்தில் உங்களுக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு ஜீபி டேட்டாக்கள் மட்டுமல்லாமல் அளவில்லாத வாய்ஸ்-கால்கள் மற்றும் அளவில்லாத எஸ்.எம்.எஸ் வசதிகள் வருடத்தின் 365 நாட்களுக்கும் கிடைக்கிறது. இதனுடன் உங்களுக்காக ஜியோ செயலி மற்றும் ஜியோ-டு-ஜியோ ஃபோன் கால் வசதியும் வழங்கபடுகிற்து.
ஜியோ 2399 திட்டம்:
இந்த திட்டத்திலும் உங்களுக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு ஜிபி டேட்டாக்கள், அளவில்லாத வாய்ஸ்- கால்கள் மற்றும் அளவில்லாத குறுஞ்செய்தி வசதிகள் வருடத்தின் 365 நாட்களுக்கும் கிடைக்கிறது. இதனுடன் உங்களுக்காக ஜியோ செயலியின் ஒரு வருட சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோ 1499 திட்டம்:
ஜியோவின் இத்திட்டமும் ஒரு வருடாந்திர திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் 365 நாட்களுக்கு, உங்களுக்காக அளவில்லாத வாய்ஸ்-கால்கள் மற்றும் 3600 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் மொத்தமாக 24ஜிபி டேட்டாக்கள் வழங்கபடுகிறது. இத்திட்டத்திலும் உங்களுக்காக ஜியொ செயலியின் ஒரு வருட சந்தா முற்றிலும் இல்வசமாக வழங்கபடுகிறது.
வருடாந்திர திட்டங்களின் பயன்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்..
இந்த வருடாந்திர திட்டங்களில் ஆகும் செலவு மாதாந்திர திட்டங்களில் ஆகும் செலவை விட மிக குறைவாகவே உள்ளது. இத்துடன் உங்களுக்கு குறுஞ்செய்தி, அளவில்லாத வாய்ஸ்-கால்கள் மற்றும் அதிவேக டேட்டாக்களும் கிடைக்கப்பெறுகின்றது. ஜியொ செயலியின்- ஜியோ செக்யூரிட்டி, ஜியோ-நியூஸ், ஜியோ-சாவன், ஜியோ-சினிமா, மற்றும் ஜியோ-டீவி ஆகியவற்றின் ஒரு வருட சந்தாவும் கிடைகின்றது. ஜியோ-டு-ஜியோ போன் கால் வசதியும் வழங்கபடுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…