மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 வயது சிறுவனுக்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர் இரண்டு லட்சம் நிதி உதவியும் வழங்கியிருக்கின்றார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“திருவள்ளூர் மாவட்டம் திருராமேஸ்வரம் கிராமம் கோட்டகச்சேரி பகுதியில் கோவில் திருவிழாவிற்காக விளம்பரப்பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அன்று இரவு அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவன் மதன்ராஜ் விளம்பர பதாகைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் விதமாக செயல்பட்டு வந்த நிலையில் அருகில் உள்ள மின்மாற்றியில் இரும்பு கம்பியுடன் கூடிய விளம்பர பதாகையில் உராய்வு ஏற்பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த விபத்தில் காயம் அடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ரூபன் என்பவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன்.
மேலும் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூபாய் இரண்டு லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூபாய் 50,000ம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…