Connect with us

latest news

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து… கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா… என்னதான் நடக்குது..

Published

on

கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கின்றார்.

தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தொடர்ந்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் 97 பேர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர்.

இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. அது மட்டும் இல்லாமல் கல்பனாவின் அதிகாரத்தில் அவரின் கணவர் ஆனந்தகுமார் தலையிட்டு வருகின்றார். இதன் காரணமாக திமுக கவுன்சிலர் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய அளவுக்கு நம்பிக்கை பெறாததால் திமுக கவுன்சிலர்களே தங்களது எதிர்ப்பை காட்டி வந்தார்கள்.

இதனால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியிருந்தார் கல்பனா. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியிருக்கின்றார். இந்த கடிதத்தை ஆணையரும் ஏற்றுக்கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

இப்படி இருக்க அடுத்த சிறிது நேரத்தில் நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். நெல்லை மாநகராட்சியில் திமுக மேயராக இருந்து வருபவர் பி எம் சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் பல பிரச்சினைகள் நிலவிய வந்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள திமுக கவுன்சிலர்களே வராத காரணத்தினால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழலில் சென்னை பெயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருக்கின்றார் சரவணன். முதல்வர் மு க ஸ்டாலின்  அறிவுறுத்தலின் பெயரில் தான் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news