தமிழ்நாட்டில் 20 வருடங்களுக்கு முன்பு மதுபானக்கடைகள் தனியார் வசம் இருந்தது. ஆனால், அதன் மூலம் வரும் வருமானத்தை கணக்கு போட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இனிமேல் மதுபானக்கடைகளை அரசே நடத்தும் என அறிவித்ததால் டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. எங்கெல்லாம் தனியார் கடைகள் இருந்ததோ அங்கெல்லாம் டாஸ்மாக் சார்பில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது.
அதோடு, தமிழகத்தின் பல இடங்களிலும் புதிதாக பல கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பு வரவே நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் மூடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் கோடிகள் டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமானமாக வருகிறது. டாஸ்மாக் மூலம் வருமானத்தை வைத்தே அரசு தரப்பில் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஓவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது மதுவை ஒழிப்போம் என எல்லா கட்சியும் வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்தபின் எந்த கட்சியும் அதை செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ரூ.1734 கோடி அதிகரித்திருக்கிறது. 2022-23ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் 44,121.13 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால், 2023-24 நடப்பாண்டில் 45, 855.67 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல பண்டிகைள் இந்த நடப்பாண்டில் வந்ததால் டாஸ்மாக் வருமான் அதிகரித்திருக்கும் என கருதப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…