Connect with us

latest news

வணக்கம் வைக்க மாட்டயா…தாக்குதல் நடத்திய தலைமை ஆசிரியை?…

Published

on

School

பள்ளி மாணவரை தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போரட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காட்டாவூரில் இயங்கி வருகிறது அரசு மேல் நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சின்னக்காலணியை சேர்ந்த கிரண் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கல்வி மற்றும் நடத்தையில் சிறந்து வழங்கியதால், கிரணை ஸ்கூட் பீயூப்புள் லீடராக நியமித்திருக்கிறார்கள். எப்போதும் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வரும் பழக்கத்தை கடைபிடித்து வருபவராம் மாணவர் கிரண். செவ்வாய்கிழமையும் அதே போல சரியான நேரத்திற்கு வந்திருக்கிறார்.

பள்ளி வாசலருகே நின்று கொண்டிருந்த கிரண், பள்ளிக்கு தாமதாமாக வந்த மாணவர்கள் இருவரை தாமதமாக வந்ததற்கு கடிந்திருக்கிறார். அந்த இரு மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது பள்ளி தலைமை ஆசிரியை அந்த வழியே வந்திருக்கிறார்.

தலைமை ஆசிரியையை கவனிக்காமல் தாமதமாக வந்த மாணவர்களிடம் தாமதத்திற்கான காரணத்தை கேட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார். தலைமை ஆசிரியையாக இருக்கும் தனக்கு வணக்கம் வைக்கமால், தன்னை மதிக்கவில்லை எனக்கூறி மாணவர் கிரணை தனது அறைக்கு கூட்டிச்சென்றிருக்கிறார் தலைமை ஆசிரியை உஷா ராணி.

student

student                                                                                                                                                                                                                              பின்னர் அறையில் வைத்து மாணவர் கிரணை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மாணவனின் பெற்றோருக்கும் தகவல் கொடுப்பட்டு, நீங்கள் வந்தால் தான் உங்கள் மகனை வகுப்பறைக்கு அனுப்புவேன், நீங்கள் வரும் வரை உங்களது மகனை நான் அடித்துக் கொண்டே தான் இருப்பேன் என தலைமை ஆசிரியை உஷாராணி தன்னிடம் போனில் சொன்னதாக மாணவர் கிரணின் தாயார் சொல்லியிருந்தார்.

கிரண் தலைமை ஆசிரியரால் தாக்கப்பட்டதாக சொல்லி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டும், தலைமை ஆசிரியை உஷாராணியை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதாக வட்டார கல்வி அதிகாரி ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *