latest news
எல்லாம் இருக்கும் இன்னைக்கு…ஆனா அந்த ஒன்னு மட்டும் மிஸ்ஸிங்க…குற்றால சீசன் நிலவரம்….
தென் மேற்கு பருவ மழை அதன் சராசரியை விட இந்தாண்டு அதிகமான மழை பொழிவை கொடுத்துள்ளது என நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையை புள்ளி விவரங்களோடு சொல்லியிருந்தது. தமிழகத்தின் அன்டை மாநிலங்களான கர்நாடகா, கேராளாவில் தென் மேற்கு பருவ மழையின் காரணமாக வெளுத்து வாங்கி வருகிறது மழை.
தென் தமிழகத்தின் மலைப்பகுதிகளில், மழை அதிகமாக பெய்யும் என்பதையும் வானிலை ஆய்வு மையம் முகூட்டயே சொல்லியிருந்தது. அதன் படி பெய்த மழையால் குற்றால அருவிகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது. இதனால் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் அருவிகளில் குளிக்க தடை போடப்பட்டது. ஆனால் கடந்த வாரம் முழுவதும் வானில் கருமேகக்கூட்டங்கள் சூழந்து, இந்தமான தென்றல் காற்று வீசி, சாரல் அவ்வப்போது உடலை நனைத்தும் இதம் தந்து வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குற்றாலத்தின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பலமான காற்று வீசி வருகிறது. புயல் நேரத்தில் இருக்கும் வேகத்தின் அளவை நெருங்கும் நிலையில் தான் இருந்தது தரைக்காற்றின் வேகம்.
கடந்த சனிக்கிழமை முதலே கூட்டம் குவியத்துவங்கி குற்றாலம் கலைகட்டியது. கூராப்புடன் காட்சியளித்த மேகம், வெயிலே இல்லாத குளும, இடைவெளி விட்டு விட்டு அவ்வப்போது சாரல். சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க இத்தனை அம்சங்கள் இருந்து வந்தாலும் அருவிகளில் குளித்து மகிழ்ந்து அதனால் கிடைக்கக்கூடிய ஆனந்தம் கிடைக்காத நிலை தான் கடந்த மூன்று நாட்களாக இருக்கிறது.
அருவிகளில் அதிகரித்த நீர் வரத்து, இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை என்பதே குற்றாலத்தின் நிலவரம். இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி பிரதான அருவிகளான ஃபைவ் ஃபால்ஸ், மெயின் ஃபால்ஸ், பழைய குற்றாலம், புலி அருவி என அனைத்து அருவிகளிலும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடித்து வருகிறது. இதனால் இங்கு வந்திருந்த பயணிகள் மிகுந்த வேதனைக்கு ஆளானார்கள். அருவிகளில் விழும் தண்ணீர் வரத்து இயல்பு நிலையை விரைவில் அடையும். தங்களது ஆவல் ஈடேரும் என எதிர்பார்ப்போடு காத்து நின்று வருகின்றனர் அருவிக்குளியல் பிரியர்கள்.