ரேபரேலி தொகுதி எம்.பியாகப் பதவியேற்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடுமையான சோதனைகளை எதிர்கொண்டபோது நீங்கள் காட்டிய எல்லையற்ற அன்பு, அதிலிருந்து தன்னைக் காத்ததாக வயநாடு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியாகக் கடிதம் எழுதியிருக்கிறார் ராகுல் காந்தி.,
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உ.பியின் ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் களம்கண்டார். இரண்டு தொகுதிகளிலுமே அவர் வெற்றிபெற்ற நிலையில், எந்தத் தொகுதியை அவர் தக்க வைப்பார் என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், ரேபரேலி தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், வயநாடு தொகுதியில் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.
இந்தநிலையில், வயநாடு தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் ராகுல் காந்தி. அந்தக் கடிதத்தில், `தினம் தினம் கடுமையான சோதனைகளை எதிர்க்கொண்டபோது நீங்கள் என்மீது காட்டிய எல்லையற்ற அன்பு, அவற்றிலிருந்து என்னைக் காத்தது. நீங்கள் ஒருபோதும் என் மீது சந்தேகம் கொண்டதில்லை. நீங்கள்தான் என்னுடைய குடும்பமாகவும் வீடாகவும் இருந்திருக்கிறீர்கள்.
நீங்கள் எனக்களித்த அன்பை எவ்வாறு திரும்ப அளிக்கப்போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அன்பும் பாதுகாப்பும் அதிகமாக எனக்குத் தேவைப்பட்ட நேரத்தில் அதை அளித்தீர்கள். நீங்கள் என் குடும்பத்தின் அங்கம். உங்கள் ஒவ்வொருவருடனும் நான் எப்போதும் உடனிருப்பேன்’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.
இதையும் படிங்க: வாழ மறுத்த மனைவி!.. கணவர் செய்த வெறிச்செயல்!.. பரமக்குடியில் அதிர்ச்சி!..
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…