அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர், நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த தொடரில், ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் துணை அணிகளாக கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
அந்த வகையில், இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வகித்து வரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வகிக்கும் எம்.ஐ. நியூ யார்க் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் கேப்டன் டு பிளெசிஸ் பேட்டிங்-ஐ தேர்வு செய்தார்.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக துவக்க வீரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே 55 பந்துகளில் 74 ரன்களை குவித்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் எட்டு பவுன்டரிகள் அடங்கும். இவருடன் களமிறங்கிய டு பிளெசிஸ் 8 ரன்களை குவித்து துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கோடி செட்டி, மில்லர் ஆகியோர் முறையே 12 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பிறகு களமிறங்கிய சான்ட்னர் 13 பந்துகளில் 27 ரன்களை விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்களை குவித்தது. எளிய இலக்கை துரத்திய எம்.ஐ. நியூ யார்க் அணியின் துவக்க வீரர் மோனக் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
மற்றொரு துவக்க வீரரான ஷயன் ஜாங்கிர் 41 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் டெய்லர், நிக்கோலஸ் பூரன், டிம் டேவிட் ஆகியோர் முறையே 15, 19 மற்றும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் ரன்களை அடிக்க தவறினர். 20 ஓவர்கள் முடிவில் எம்.ஐ. நியூ யார்க் அணி 8 விக்கெட்களை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக டேனியல் சாம்ஸ், முகமது மொஷின் தலா இரண்டு விக்கெட்களை இழந்தனர். மேலும் ரஸ்டி தெரான், ஜியா உல் ஹக், டுவைன் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…