Categories: latest newstamilnadu

குவிந்த கூட்டம்…குளிக்க முடியாதோ?…குற்றாலம் இன்று…

தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தை தமிழகத்தின் பல்வேறு இடங்கள் உணர்ந்தது. நீலகிரியில் அடித்து துவைத்து எடுத்தது பேய் மழை. இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டது பாதிப்பு. கேரளாவிலும் மழை பொழிவு இருந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழக மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என கணித்திருந்தது. அதே போல மழை பெய்தது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் சீசன் நேரத்தில் முன்னுக்கு நிற்பது குற்றாலமுமே. குற்றால மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அனைத்துஅருவிகளிலும் தண்ணீர் வரத்து நன்றாகவே இருந்து வருகிறது. சீசன் துவக்க நேரத்தில் கண்ணாமூச்சி காட்டி வந்த நிலவரம் பின் நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு சாதகமாக அமைந்தது. பிரதான அருவிகளில் அனைத்திலும் குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்க நாள் தவறாது வருகை தந்தனர் பொழுதுபோக்கு பிரியர்கள்.

Falls

ஆடி மாதம் துவங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் காற்றின் வேகத்தில் இருக்கும் தீவிரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதே போல தான் குற்றாலத்திலும் இன்று குளுமையான காற்று வீசி வருகிறது. காலை பதினோரு மணி நிலவரப்படி

காற்றின் வேகத்தில் உடலை நனைக்கும் சிலு சிலு சாரலால் மனதை வருடும் சூழலே இருந்தது. காற்று, சாரல், தண்ணீர் என அனைத்திலும் இன்று நிறைவை காட்டியிருந்தாலும், விடுமுறை தினம் என்பதால் காலை பதினோரு மணி நிலவரப்படி கூட்டம் குவிந்திருந்தது. இதனால் அதிக நேரம் குளிக்க முடியுமா? என்பதுவே குற்றாலத்தின் இன்றைய நிலை, காரணம் விதிக்கப்ப்பட்டுள்ள தடை, அனைத்து அருவிகளிலும் அபாய கட்டத்தை தாண்டி விழுந்த தண்ணீரால் பாதுகாப்பை மனதில் கொண்டு தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

sankar sundar

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago