latest news
மேயர் முன்னிலையில் வினோத எதிர்ப்பை தெரிவித்த கவுண்சிலர்கள்…பாரபட்சம் காட்டியதாக புகார்…
மத்திய அரசின் பட்ஜெட்டை அன்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் ஆந்திராவிற்கும், நிதிஷ்குமாரின் பிகாருக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடும், அதிக திட்டங்களும் அறிவிப்பும் இருந்துள்ளதாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடை பெற்றது. இதில் பங்கேற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர் அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் நகலை அவைக்குள் வைத்து கிழித்து எறிந்து பட்ஜெட்டின் மீதான தனது எதிர்ப்பை தெரிவித்தனர். மதிமுக கவுண்சிலரின் இந்த செயலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் உடன் நின்று தங்களது எதிர்ப்பையும் காட்டினர்.
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த பட்ஜெட் ஆந்திராவிற்கும், பிகாருக்குமான பட்ஜெட் என்றும், தமிழகத்தை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு புறக்கணித்ததாக சொல்லி கவுண்சிலர்கள் பட்ஜெட் நகலை கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்பினை காட்டினர். சென்னை மேயர் பிரியா முன்னிலையில் அரசின் ஆவணத்தை கிழித்து எறிந்து எதிர்ப்பை காட்டும் விதமாக நடத்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் இந்த செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.