Connect with us

latest news

எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!.. விரைவில் கைது?…

Published

on

vijaya baskar

2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள் எழுந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்ததால் அவர் மீது யாராலும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

கரூரில் 100 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அதற்கு சொந்தமானவரை மிரட்ட அவரிடமிருந்த அந்த சொத்தை விஜயபாஸ்கர் மிரட்டி வாங்கியதாக இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் இந்த வழக்கு சூடு பிடித்தது.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே, கடந்த 12 நாட்களாக தலைமறைவானார் விஜய பாஸ்கர். அதோடு, கைதில் இருந்து தப்பிப்பதற்காக முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விஜய பாஸ்கர் தரப்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அவரின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், அவரை கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் களம் இறங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் போலீசாரால் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news