Connect with us

latest news

ஐந்தருவியில தான் குளிக்கலாமே அப்புறம் என்ன…குற்றாலத்தில் நீக்கப்பட்ட தடை?…

Published

on

கடந்த மூன்று நாட்களாகே குற்றாலத்தில் இருந்த சூழல் முற்றிலும் மாறியே உள்ளது, ஒரு நாள் குளுமை, ஒரு நாள் வெயில் என கண்ணாமூச்சி காட்டி வந்து கொண்டே இருந்தது. ஆனால் சீசன் துவங்கியதிலிருந்து இப்போது தான் தொடர்ச்சியாக குளுமை சாரல் என கலைகட்டி வருகிறது.

எங்கே பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் என படுஜோரான சூழலே காணப்படுகிறது. நேற்று முன்தினம் முதலே அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஐந்தருவி, மெயின் ஃபால்ஸ். பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் குறிப்பிட்ட எல்லைகையை விட தண்ணீர் ஆர்ப்பத்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

குற்றாலத்தின் மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அருவிகளுக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு அதிகமானது. குளத்து மகிழ வேண்டும் என்ற ஆர்வத்தில் குற்றாலத்தை நோக்கி வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை ஏமாற்றத்தையே தந்தது.

சாரல் அவ்வப்போது விழுந்து மனதை மகிழ்வித்து வந்தது.

Falls

Falls

இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி ஐந்தருவி மற்றும் புலி அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆறுதலை வழங்கியது. ஆனால் மெயின அருவி, பழைய குற்றாலத்தில் குளிக்க தடை நீடித்து வருகிறது.

இன்று காலை பதினோரு மணி நிலவரத்தின் படி குற்றாலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது, இதமான குளு,குளு தென்றல் காற்று வீசி வருகிறது. சாரலும் அவ்வப்போது விழுந்து மனதை இதமாக்குகிறது. இன்று குற்றாலத்திற்கு இன்பச் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஏற்ற சூழலே இருந்து வந்தது.

google news