குற்றால அருவிகளில் நீர் வரத்து கடந்த சில நாட்களாகவே அதிகமாகவே இருந்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருந்தது போல மலைப்பகுதிகளில் பெய்து வந்த மழையால் அருவிகளில் விழும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இந்த மாத துவக்கத்தில் ஒரு சில நாடகள் மந்தமான நிலை குற்றாலத்தில் இருந்து வந்தாலும், கடந்த சில நாட்களாக இருந்து வரும் நிலைமை தலை கீழ் என்று தான் சொல்ல வைத்து விட்டது.
குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஃபைவ் ஃபால்ஸ், மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முன்பு குளிக்க தடை விதிக்கப்பட்டது போன்ற நிலைமைகள் ஏதும் இல்லாததால் குதூகலமாக காணப்பட்டது குற்றாலம். வெயிலின் தாக்கமும் சற்று குறைவாகவே இருந்து வந்தாலும், அருமையான காற்றும் வீசி வருகிறது. சாரல் விழுவதில் தான் சிறிது மாற்றம் ஏற்பட்டிருந்தது.
திடீர்,திடீரென விழுந்த சாரலால் மகிழ்வு கிடைத்து வந்தது. இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி குற்றாலத்தின் முக்கிய அருவிகளான ஃபைவ் ஃபால்ஸ், பழைய குற்றாலம், மெயின் உள்ளிட்ட மூன்று அருவிகளிலும் தண்ணீரின் வரத்து படு ஜோராகவே இருந்தது. வாரத்தின் வேலை நாள் என்றாலும் இன்ரு கூட்டம் அதிக அளவிலே காணப்பட்டது. வார இறுதி நாட்களில் வரும் கூட்டம் போலவே தான் இருந்தது இன்றைய நிலை. இந்த நிலை இனி வரும் நாட்களிலும் நீடித்தால் இங்கு வரும் மக்களுக்கு மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…