latest news
மேற்கு திசை காத்து…மேக மூட்டத்தோட சேர்த்து…கும்மாளம் போடனுமா?…இன்னைக்கு குற்றாலம் போங்க!…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காற்றின் வேகம் மிக அதிகமாக காணப்படுகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் தரைக்காற்று பலமாக வீசலாம் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியிருந்தது. அதன் படியே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திண்டுக்கல்லில் திடீர் சூறைக்காற்று வீசியது. இதனால் சில நிமிடங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இப்போது வீசி வரும் காற்றினால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை தான் இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி குற்றாலத்தில் இருந்து வந்தது. இங்கும் காற்று பலமாக வீசியது. வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டது. அருவிகளில் ஆனந்தக் குளியல் போட்டு மகிழவைக்கும் விதமாக தண்ணீர் வரத்தும் சரியான அளவிலேயே இருக்கிறது.
குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஐந்தருவி, மெயின் ஃபால்ஸ், பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலை மோதியது.
வார இறுதி நாள் என்பதால் பொழுதைக்கழிக்க கூட்டம் குவிந்திருந்தது. இந்த வாரம் முழுவதும் அதிக நேரம் குளித்து மகிழ ஏற்ற சூழலே இருந்து வந்தது. கண்ணுக்கு எட்டும் திசைகள் எல்லாவற்றிலும் மனித தலைகளே தென்படுகிறது. நாளை கூட்டம் இன்னும் அதிகரித்து குதூகலம் கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.
அதே நேரத்தில் கூட்டம் மேலும் அதிகரித்தால் மக்கள் அதிக நேரம் குளிக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாகி விடும். பாதுகாப்பு காரணங்கள் காரணமாகவும், வருகை தந்த அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் காவல் துறையினர் க்யூ முறையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விடுவார்கள் என்பதால்.